தொழிலாளியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழையபாலக்கரை பகுதியில் புதியதாக ஓட்டல் திறப்பதற்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அந்த ஓட்டலில் மரவேலைகளை காளிமுத்து நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்துள்ளார். அவர் ஹரிஹரனிம் இங்கே யார் ஓட்டல் திறப்பது எனக் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது ஹரிஹரனுக்கு ஆதரவாக வந்த பாலக்கரை கல்யாணராமய்யர் பேட்டையைச் சேர்ந்த சித்திரவேலு, முல்லைவளவன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முல்லைவளவன் தரப்பினர் ஹரிஹரன், சித்திரவேலு ஆகிய இருவரையும் தாக்கியதாக தெரிகின்றது. இதில் ஹரிஹரன் மற்றும் சித்திரவேல் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.