Categories
சினிமா தமிழ் சினிமா

பண்டிகை தினத்தை குறிவைக்கும் ‘எனிமி’… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

எனிமி படத்தை பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Official: Enemy Teaser Release Date is Here! Tamil Movie, Music Reviews and  News

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி படத்தை பண்டிகை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகையையொட்டி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்  கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |