Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது ரொம்ப தப்பு…. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ். விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |