Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று”… வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்..!!

தனது அன்பான வார்த்தையால் அனைவரையும் கவரக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். அஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். ஆகையால் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மனைவின் கழகத்தால் மற்றவர்களின் பகை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக  நடத்தல் அவசியமாக இருக்கும். இன்று அனுகூலமான பலன்கள் ஓரளவு கிடைக்கும். பணவரவு மன திருப்தியை கொடுப்பதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவரது நட்பும் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது  கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரம் நிறைவான லாபத்தை இன்று கொடுக்கும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

இல்லத்தில் கலகலப்பும் வந்து சேரும். இன்று மாலை நேரங்களில் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழல் இன்றிருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பது நல்லது. முயற்சியின் பேரிலே  இன்று வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதும்,  முக்கிய இடங்களுக்கு செல்லும் போதும்  பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக வெற்றியை கொடுக்கும். அதுபோலவே நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டுடன் இன்றைய நாளைதொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட  எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |