சொத்தை ஏமாற்றி வாங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக சாந்தி என்ற பெண் தன்னுடைய சொத்தை ஏமாற்றி வாங்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று தீக்குளிக்க முயற்சி செய்த சாந்தம்மாளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அவரை விசாரணை செய்த போது கலந்திரா பகுதியில் வசிக்கும் கண்ணபிரான் என்பவர் தன்னுடைய சொத்தை ஏமாற்றி வாங்கியதால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக சாந்தம்மாள் கூறியுள்ளார். இதனையடுத்து கண்ணபிரான் மீது கிராம நிர்வாக அலுவலர் விநாயகம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் கண்ணபிரானை வலைவீசி தேடி வருகின்றனர்.