மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து அலுத்து போகும் ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மன மகிழ்ச்சி இருக்கும். முக்கிய பணிகளை இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள். அதனால் கவலைகள் மறந்து கலிப்படையக்கூடும். அரசாங்க ஆதரவு மற்றும் வங்கி கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமை சீராகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் அனைத்தும் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியின் சொல்படி நடந்து கொண்டால் நல்லது.
வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இன்றைய நாள் குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி காணப்படும். கலகலப்பு இருக்கும். மற்றவர்களுக்கு எந்த வாக்குறுதியும் தயவு செய்து தர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல விதமாக அமையும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும்போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்