Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

மணல் கொள்ளையைத் தடுக்குமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி‌ ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து அங்கிருக்கும் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வருவாய்துறையினருக்கு மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்ததால் விவசாயிகள் பொதுமக்களின் உதவிகளோடு ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட்டுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கரை போல் கட்டப்பட்டிருக்கும் மணலை கொள்ளையர்கள் இரவில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்து வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மணல் கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பின் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதன்பின் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன் வைத்து கடப்பாரை மற்றும் மண்வெட்டிகளுடன் பாலத்தின் மீது திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அதில் விவசாயிகள் சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து ஜீப்பில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மணல் கொள்ளை தடுக்கப்படும் எனவும், ஏரி கால்வாய் நீர்வரத்து பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் காரணத்தினால் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். மேலும் சிறை பிடித்து வைத்திருந்த அரசு பேருந்தை அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

Categories

Tech |