நடிகை வரலட்சுமி அடுத்ததாக நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் படங்களில் கதாநாயகியாக மட்டுமல்ல வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னித்தீவு, பாம்பன், காட்டேரி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ‘தத்வம்சி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இஷான், ஹரிஷ் உத்தமன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரமணா கோபிசெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்த அதிரடி ஆக்ஷன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.