மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டி, கீழ தேவநல்லூர் பகுதியில் வசிக்கும் மற்றொரு இசக்கிபாண்டி மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் ஆகியோரை மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.