காலக்கெடு முடிந்த தங்களது சுகாதார அட்டைகளையும், ஓட்டுனர் உரிமங்களையும் புதுப்பிக்க தவறும் கனடாவிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலின் காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் காலக்கெடு முடியும் நபர்களது அடையாள அட்டைகளை புதுப்பிக்க தேவையில்லை என்று கன்னட நாட்டிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேல் குறிப்பிட்டவாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த சுமார் 17% கனட நாட்டிலுள்ள ஒன்றாரியோ பொதுமக்களை அம்மாவட்ட அரசாங்கம் காலக்கெடு முடிந்த அடையாள அட்டைகளை புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை காலக்கெடு முடிந்த ஓட்டுனர் உரிமங்களையும், சுகாதார அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் நடப்பாண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாகனம் தொடர்பான உரிமங்களை ஓட்டுனர்கள் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஒன்றாரியோ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மேற்குறிப்பிட்டவாறு காலக்கெடு முடிந்த உரிமங்களை புதுப்பிக்க தவறும் நபர்கள் கடந்தாண்டிற்கு உரிய கட்டணத்தையும், தற்போது புதுப்பிப்பதற்கு ஆகின்ற செலவையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.