Categories
உலக செய்திகள்

இவர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும்…. ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. கருத்து தெரிவித்த பொதுமக்கள்….!!

தலிபான்களின் வசம் வந்த ஆப்கானிஸ்தான் விவகாரத்தை அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை முன்னிட்டு 60 சதவீதம் மக்கள் அவர் தகுதி இழப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று அறிவித்ததையடுத்து தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளது. ஆகையினால் அமெரிக்க வாக்காளர்களில் 52% பேர் அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

அதாவது அவர் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் தலிபான்களின் வசம் சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரத்தை கையாளுவதில் நிலைதடுமாறிய அதிபர் ஜோ பைடன் அதனை கோட்டை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து 60% அமெரிக்க மக்கள் ஆப்கன் மக்களையும், அங்கிருக்கும் அமெரிக்க வாசிகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் நாட்டுப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று உறுதி நிலைப்பாட்டை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டிப்பாக தகுதி இழப்பதற்கான விசாரணைக்கு தள்ளப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

Categories

Tech |