குட்கா மூட்டைகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி டோல்கேட் பகுதியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் கார் நிற்காமல் டோல்கேட்டின் தடுப்பு கம்பியை உடைத்து கொண்டு அருகிலிருந்த போலீஸ் ஜீப் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் வாகனத்தில் சென்று காரை துரத்தி மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதன்பின் காரை சோதனை செய்த போது அதில் 18 மூட்டைகளில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களை விசாரணை செய்த போது கடத்தலில் ஈடுபட்டவர்கள் யுவராஜ் மற்றும் பாபுலால் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்கு பிறகு அவர்களிடமிருந்த குட்கா பாக்கெட்டுகள் மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.