தலிபான்களின் வசம் வராத பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் நடைபெற்று வரும் மோதலின் மூலம் சுமார் 10 க்கும் மேலான சோதனைச் சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்களின் அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் வசம் வராமலுள்ள பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக திர்ப்பு படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திர்ப்பு படையின் தலைவராக அகமது மசூத் என்பவர் உள்ளார். இவர் சமீப காலத்தில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வோம் என்றும், ஒருபோதும் அவர்களிடம் சரணடையமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, தலிபான்கள் அனைத்து ஆப்கன் மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்கி அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் தலிபான்கள் தரப்பில் திர்ப்பு படையில் இருப்பவர்களுக்கு தலிபான்கள் உருவாக்கும் அரசாங்கத்தில் 1 அல்லது 2 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆகையினால் திர்ப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தலிபான் அதிகாரிகளில் ஒருவர் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் நடந்து வரும் மோதலின் மூலம் 10 க்கும் மேலான சோதனைச் சாவடிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.