லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக் கரையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் கிட்டத்தட்ட 875 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளதாக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் சுமார் 1,000 த்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்கேயே டென்ட் கொட்டகை அமைத்து மிகவும் மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கியுள்ளார்கள். மேலும் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள 6 மைதானங்களில் இந்த இசை நிகழ்ச்சி விழா நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இசை நிகழ்ச்சி விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் சிலவற்றை பதிவிட்டு தன்னுடைய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் போட்டு விட்டு சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் மொத்தமாக 875 டன் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த 875 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக சிதைவடைவதற்கு சுமார் 10,000 வருடங்கள் வரை ஆகும் என்பதால் இதனை மறுசுழற்சி செய்யும் ஆலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.