Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “தாயின் ஆரோக்கியத்தில் தனி கவனம் தேவை”… நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்..!!

தன் கண் பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! தோல்வியே வெற்றிக்கான  முதல் படி என உணர்ந்தவர்கள் நீங்கள். தோல்வியை கண்டு துவளாதவர்கள். முன்னேற முயற்சிகள் மேற்கொள்பவர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுக்கும். வெற்றியை கொடுக்கும். தாயின் ஆரோக்கியத்தில்  மட்டும் தனி கவனம் வேண்டும். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை மட்டும் தள்ளிப் போடுவது கொஞ்சம் நல்லது. காரியத்தில் அனுகூலமும் இருக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டங்களும் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இன்று இருக்கும். இன்று உங்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படக்கூடும்,  பொறாமையும் படக்கூடும்.

இன்றைய  நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் வெற்றிகரமான விஷயங்களாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். அதுபோலவே மனதில் ஏதேனும் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். முடிந்தால் ஓய்வு நேரத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறை கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள்.. அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அது போலவே இன்று காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்க கூடிய விதமாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |