பொது விநியோகத் திட்டம்– கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நியாயவிலைக் கடைகளில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர் ஒருவர் மட்டுமில்லாமல் அவருடைய உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இருவர் பணிபுரியும் கடைகளில் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். ஒரு நபர் மட்டுமே பணிபுரிய தகுதியும் நியாயவிலை கடைகளில் பணியமர்த்த கூடாது. நியாயவிலை கடைகளில் ஆண்களுக்கு நிகராக பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டலாம். இருப்பினும் பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்படும் நியாய விலைக்கடைகளில் கழிப்பறை வசதி கட்டாயம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.