ராஜஸ்தான் மாநிலம் பூரா சிக்கிரஉடா என்ற கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருடைய வீட்டில் எருமை மாடு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. அந்த எருமை கன்று அதிசயமாக இரண்டு தலைகள் மற்றும் இரண்டு கழுத்துகளுடன் பிறந்துள்ளது. கழுத்துக்கு மேலே இருப்பது அனைத்துமே இரண்டாகவும். கழுத்துக்கு கீழே இருப்பது எல்லாமே ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து அந்த கன்றுக்குட்டியை பார்த்துக் செல்கின்றனர். அந்த எருமை கன்று இரண்டு வாய் மூலமும் பாலைக் குடிகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவர் வந்து அந்த கன்றை பரிசோதித்து நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.