பிரித்தானியாவில் பிரபல கார் உற்பத்தி ஆலை ஒன்றின் அருகே 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள Jaguar Land Rover எனும் பிரபல கார் உற்பத்தி ஆலைக்கு அருகே நிலப்பரப்பில் 16 சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1996-ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு சிறுவர்களும் அந்த 16 எலும்புக்கூடுகளில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. ஆனால் சிறுவர்களுக்கும் அந்த எலும்புக்கூடுகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளின் கை பிடிகள் தொடர்பில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் மூலம் எந்த விதமான அடையாளமும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயம் அந்த சடலங்கள் 18 மற்றும் 20-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் 1800 காலகட்டத்தை சேர்ந்த சவப்பெட்டிகளின் கைப்படிகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Elmdon எனும் தேவாலய கல்லறைத்தோட்டத்தில் அந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு சாரா என்பவரது சடலம் அந்த 16 சடலங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.