Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நினைத்த காரியங்கள் நடக்கும்”… மனக்கவலை நீங்கும்..!!

முடியாததை முடித்துக் காட்டும் துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலை மேம்படும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் கணவன் மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாகவே நடக்கும்.

மனக்கவலை நீங்கி நிம்மதியும் உண்டாகும். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இன்றைய நாள் நீங்கள் மனமகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். அதுபோலவே மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அனைத்துவித நன்மைகளும் நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் காவி நிறம்

Categories

Tech |