எதிரிகளை தவிடுபொடியாக்கும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று தன லாபம் அதிகரிக்கும்.. தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று வழக்கத்தை விட கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். இன்று பொருள் வரவு சிறப்பாக இருக்கும். பயணம் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகள் தாண்டி உழைக்க வேண்டியிருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது ஆயுதங்களை கையாளும் போது கொஞ்சம் கவனமாக கையாளுங்கள்.
இன்று பொறுமையைக் கடைப்பிடித்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறக்கூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அதிகமான இடங்களுக்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை அல்லது வெள்ளை ஆடை அணிந்து செல்லுங்கள் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்