ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான அஜித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு 12 மணிக்கு அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அஜித் குமார் தான் கொண்டு சென்ற 2 லிட்டர் பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த அஜீத் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.