Categories
மாநில செய்திகள்

“போலி பத்திர பதிவு” பத்திரப்பதிவு தலைவரே ரத்து செய்யும்…. புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

போலியான ஆவணங்கள் மூலமாக போலி பத்திர பதிவு நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ அல்லது பத்திரப்பதிவுத்துறை ஐஜியோ அதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் கோரலாம். இவ்வாறு போலி பத்திர பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடி செய்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து இதற்கு தீர்வு காணும் விதமாக போலி பத்திர பதிவுகளை பத்திரப்பதிவு தலைவரே  ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக மோசடி பத்திரங்களை இனி பதிவுத்துறை தலைவரே ரத்து செய்யும் அதிகாரம் அளிக்கப்படுகிறது .

Categories

Tech |