Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. வாவ் சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் பலரும் தங்களுடைய வேலையை இழந்து விட்டனர். மேலும் பலர் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை பணியமர்த்த உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2025ஆம் வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், 10 லட்சம் நேரடி மற்றும் நேரடி அல்லாத வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 55 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

Categories

Tech |