Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முகநூலில் வந்த பெண்ணின் புகைப்படம்…. அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை…. போலீஸ் நடவடிக்கை…!!

நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மாப்பிள்ளைக்கு முகநூலில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான நரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நரேஷ் குமார் தான் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு நபருடன் அவருக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த நரேஷ்குமார் அந்த இளம்பெண்ணின் நிச்சயதார்த்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதன்பின் அந்த புகைப்படத்தை மாப்பிள்ளையின் முகநூலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் உறவினர் ஒருவர் கேட்டபோது நரேஷ் குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |