ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இந்நிலையில் துரைசாமிக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் சகோதரர்களுக்கு இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துரைசாமி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 150 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறியுள்ளார். அதன்பிறகு துரைசாமி அங்கிருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த துரைசாமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.