Categories
உலக செய்திகள்

காரின் பாகத்தை திருடி விற்க முயற்சி…. அதிரடி விசாரணை நடத்திய போலீசார்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

பணத்திற்காக காரின் பாதத்தை திருடி விற்க முயன்று 3  பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டின் தெற்கு வேல்ஸில் Rhondda என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில்  Russell Seldon எனும் நபர் வாழ்ந்து வருகின்றார். அதாவது  Russell Seldon கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டிற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் கூடாரத்தில் நிறுத்தி வைத்திருந்த BMW காரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது காருக்கு அடியில் அசைவின்றி இரண்டு கால்கள் மட்டும் தெரிவதை பார்த்துள்ளார். பின்னர்  Russell Seldon அந்த கால்களை வெளியே இழுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால்  Russell Seldonனால் இழுக்க முடியவில்லை. அதனால் பயந்த Russell Seldon உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காருக்கு அடியில் கிடந்த நபரை வெளியே எடுத்துள்ளனர்.

இந்நிலையில் காரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட நபரின் முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதிகள் நசுங்கியிருந்ததனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என போலீசார் உறுதிசெய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் இறந்து கிடந்த நபரின் கைரேகைகள் மற்றும் பச்சை குத்தப்பட்டிருக்கும் கைகளை வைத்து போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த நபர் 25 வயதுடைய Daniel Stephens என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் உயிரிழந்த Daniel Stephens குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது அந்த நபர் Torfaen கவுன்டியில் உள்ள Blaenavon நகரத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் Daniel Stephensக்கு 500 பவுண்டுகள் பணம் அவசரமாக தேவைப்பட்டதாகவும் அதனால் BMW காரில் இருக்கும் பாகத்தை திருடி விற்க திட்டமிட்டதாகவும் அவரது நண்பர் ஒருவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து BMW காரின் உரிமையாளர் Russell Seldon காருக்கு அடியில் Daniel Stephens இறந்து கிடந்த இடத்தில் ஒரு டார்ச் லைட் மற்றும் கார் ஜாக் கிடந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதனடிப்படையில் போலீசார் அவர் காரில் உள்ள ஜாக்கை திருட முயற்சிக்கும் போது அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு அவர் மீது விழுந்ததால் உடல் நசுங்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |