போர்ச்சுக்கல் அரசாங்கம் இங்கிலாந்து பயணிகளுக்கு விதித்திருந்த கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
போர்ச்சுக்கல் அரசாங்கம் கடந்த 18 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகளுக்கு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனையடுத்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி இங்கிலாந்து நாட்டின் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு நாள் குறித்த கட்டுப்பாடுகளில் தளர்வு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.
அதாவது இங்கிலாந்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு பயணம் செய்யும் பயணிகள் இனி கொரோனா குறித்த தடுப்பூசியை போட்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தங்களுக்கு இல்லை என்ற சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.