இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவர்களின் உடைமைகளை திருடும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸில் இறுதிச் சடங்கில் இறந்தவரின் தோழி என்று கூறிக்கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் சவப் பெட்டியின் அருகே சென்றவுடன் இறந்தவரின் கம்மல், மோதிரம், நெக்லஸ் போன்ற அணிகலன் காணாமல் போனதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் Liévin என்ற இறுதிச் சடங்கு மையத்தின் அருகில் வாழ்பவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வீட்டை போலீசார் சோதனை செய்தபோது பல்வேறு நகைகள் கிடைத்ததோடு சுவாரசியமான தகவலும் கிடைத்துள்ளன.
அந்தப் பெண் வீட்டில் அண்மையில் இறந்தவர்களின் இறப்பு அறிவிப்புகள் மற்றும் ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த ஆவணங்களில் இறந்தவர்களின் உடல் இருக்கும் அறைக்கு அவர்களின் உறவினர் செல்வதற்கான ஆக்சஸ் குறியீடுகள் உள்ளன. அதனை பயன்படுத்தி அந்தப் பெண் இறந்தவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் அதே நாளில் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட ஆண் நபர் ஒருவரின் பர்ஸ் அந்த வீட்டில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதிலிருந்து அந்த பெண் அடிக்கடி திருட்டுகளில் அதிகமாக ஈடுபடுவார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.