கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த குழந்தைகளை புதுவிதமாக வரவேற்ற ஆசிரியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ரஷ்யாவில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. மேலும் ரஷ்யாவில் பள்ளிகள் திறக்கப்படும் நாளை அறிவு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை வரவேற்கும் வகையில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதே போன்று ரஷ்யாவின் தென்கிழக்கு நகரில் உள்ள கபரோவ்ஸ்கில் இருக்கும் பள்ளி எண் 76ல் நடன நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனது பெற்றோருடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் மத்தியில் பள்ளி ஆசிரியை ஒருவர் அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம் ஆடியுள்ளார்.
இதை பார்த்த குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த சம்பவமானது உள்ளூர் கல்வி அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. அதிலும் இது போன்ற நடனத்தை குழந்தைகள் முன்னால் நிகழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத காரியமாகும் என உள்ளூர் கல்வித்துறை ஊடகம் ஒன்றில் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திய ஆசிரியையின் செயலுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்று பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளியை அதிகாரப்பூர்வ சோதனை செய்ய இருப்பதாகவும் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.