ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழை சுமார் 1 மணிநேரம் வரை நீடித்தது. இதேபோன்று சிவகிரி, ஊஞ்சலூர், அந்தியூர், போன்ற பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.