பிளஸ்-2 மாணவரை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மட்டத்திலுள்ள வெண்டிபாளையத்தில் பிளஸ்-2 மாணவர் வசித்து வருகின்றார். இவர் கொல்லம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றார். இவர் பள்ளிக்கூடம் முடிந்து கொல்லம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 ஸ்கூட்டர்களில் வந்த 4 பேர் மாணவனிடம் செல்போன் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்போனை கொடுக்க மறுத்த மாணவனை அவர்கள் சோடா பாட்டிலால் தாக்கினார்கள்.
இதனால் படுகாயமடைந்த மாணவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் மாணவனை தாக்கியது 18 வயதுடைய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தலைமறைவாக இருக்கின்ற ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.