கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 22,630 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 127 இடத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்அமைக்கப்பட்டு 22 ஆயிரத்து 630 நபர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து வழக்கம்போல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் முகாமிற்கு சென்றுள்ளனர். அங்கு முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பின் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.