Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சிக்கோட்டையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்த அடிப்படியில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதில் நீர்மின் உற்பத்தி வட்டத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை வேலை துண்டிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 412 ரூபாய் கூலியை பிடித்தம் செய்யாமல் கொடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் தமிழ்நாடு மின்வாரிய தேசிய முன்னணி தொழிலாளர் சங்கம் சார்பில் 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மேலும் மாநில செயலாளர் என்.செந்தில்குமார் முன்னிலையில் ஈரோட்டில் உள்ள காவிரி, பவானி நீர்மின் திட்டங்களில் பணியாற்றும் 93 தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் ஈடுபட்ட தொழிலாளரிடம் பொறியாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Categories

Tech |