சீனா உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. இதனையடுத்து சீனா அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸை சீனாதான் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது என்று அமெரிக்கா போன்ற பல நாடுகளின் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது நிரூபிக்கப்படவில்லை. இதனிடையே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்தியாவின் அண்டை நாடு இலங்கை ஆகும். மேலும் சீனா அடுத்ததாக ஈழத்தமிழர்களின் வாழ்விடமாக இருக்கும் வடக்கு மாகாணத்தை கைப்பற்ற தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வடக்கு மாகாண பகுதியில் சீனாவுக்கு இலங்கை அரசு காற்றாலை மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளது. அதனால் தமிழக கடல் பகுதியிலிருந்து சீனா மிக மிக அருகில் நெருங்கி வருவது இந்தியாவிற்கு பேராபத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.
மேலும் சீனா தென்சீனக் கடல் முழுவதையும் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசிய நாட்டின் மன்னனாக தன்னை வளப்படுத்திக் கொள்ள இந்திய பெருங்கடலை குறி வைத்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடலை சுற்றி உள்ள அனைத்து நாட்டு மக்களையும் தனது காலடியின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்த சீனா இலங்கையும் மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றது. இந்தியாவும் இலங்கையும் ஒரு காலத்தில் நெருங்கிய நட்பு நாடாகதான் இருந்ததுள்ளது. ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போருக்குப் பின்னர் அவை அனைத்தும் மொத்தமாக மாறிவிட்டது. தற்போது இலங்கை சீனாவுடன் நெருங்கியுள்ளது. இதனையடுத்து சீனா கடன்களை கொடுத்து நாடுகளை ஆக்கிரமிக்கும் திட்டத்தை இலங்கையில் செயல்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அம்பாந்தோட்டை துறைமுகம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக இருப்பதால் அவர்களின் ராணுவ தளமாக மாறி விடும் பேராபத்து உள்ளது. பின்னர் அம்பாந்தோட்டையை கைப்பற்றியதும் சீனா ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் நழையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இலங்கை அரசு மன்னார் வளைகுடா பகுதியில் பிரம்மாண்டமான காற்றாலையை நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் சீன நிறுவனங்களுடன் சேர்ந்து செய்ய இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே இந்தியாவின் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழும்பியுள்ளது. இதேபோன்று வடக்கு மாகாண கடலோர பகுதிகளில் கடல் அட்டை வளர்ப்பு திட்டத்திற்காக இலங்கை அரசு சீனாவுக்கு இடம் ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீனா பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் இலங்கையில் செய்ய தயாராக உள்ளது.
இந்நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகம் கன்னியாகுமரியில் இருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ளது. அதாவது தமிழக கடல் பகுதியில் இருந்து காற்றாலை திட்டங்களை செயல்படுத்த சீனாவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 50 கி.மீ தூரத்தில் தான் அமைந்துள்ளது. இந்த அளவு சீனா இந்தியாவை மிக மிக அருகில் நெருங்கி வருவது பேராபத்தை விளைவிக்கும். தற்போது வரை சீனா இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தானை தவிர சீசெல்ஸ், மொரீஷியஸ், மாலத்தீவு, வங்க தேசம், மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் சீனா இந்திய பெருங்கடலை வளைப்பதற்கு தடையாக இருப்பது இந்தியா மட்டும்தான். இதனையடுத்து இயல்பாகவே பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை அரசு கொரோனா காலத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பருப்பு ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் சர்க்கரை ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசி விலை கடுமையாக அதிகரித்ததால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இலங்கை அரசு பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது வணிகர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து விற்பது மற்றும் பதுக்கினால் விளைவுகளை சந்திக்கக்கூடும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இதுக்குறித்து இந்திய கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது “சீனா தனது கொள்ளையடிக்கும் கொள்கையின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் நுழைந்து விட்டது. இருப்பினும் இந்திய கடல் பகுதிக்குள் அருகில் நெருங்க மிக அதிக அளவில் வேலை செய்து வருகின்றது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் வரும் காலத்தில் இந்தியாவிற்கு பேராபத்தை ஏற்படுத்தலாம். இது தங்களுக்கு கவலையை அளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.