Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் பில் போடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

4000 நெல் மூட்டைகளில் பில் போடாத காரணத்தினால் விவசாயிகள் லாரியை சிறைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோனிமேடு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெல் மூட்டைகளுக்கு பில் போடாத நிலையில், அங்கு பெய்த மழையால் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டது. இதில் 1,100 நெல் மூட்டைகள் பில் போடப்பட்டிருந்தது. ஆனால் மீதமிருந்த 4000 நெல் மூட்டைகளுக்கு பில் போடவில்லை. பின்னர் பில் போடப்பட்ட 1,100 நெல் மூட்டைகளை மட்டும் பணியாளர்கள் லாரியில் ஏற்றியுள்ளனர்.

அப்போது விவசாயிகள் இங்கு இருக்கும் 4000 நெல் மூட்டைகளை பில் போட்டு பணம் கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறி லாரியை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த கலவை தாசில்தார் ஷாமிம், கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன், மண்டல மேலாளர் முருகேசன், துணை காவல்துறை சூப்பிரண்டு பிரபு, கலவை காவல்துறை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆகியோர் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது விவசாயிகளிடம் தங்களின் கோரிக்கைகள் கலெக்டரிடம் நேரில் சென்று கலந்தாய்வு செய்து நிறைவேற்றப்படும் என கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |