விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் மிர்ணாளினி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
Are you ready for the celebration?#Enemy movie's second single #TumTum, a vibrant song releasing tomorrow @ 6pm on @divomusicindia YT@VishalKOfficial @arya_offl @anandshank @vinod_offl @MusicThaman @SamCSmusic @mirnaliniravi #SriVardhini #Aditi #SatyaYamini #Roshini #Tejaswini pic.twitter.com/NozK31Hark
— Divo (@divomovies) September 2, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி (செப்டம்பர் 3) இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது.