உரிய அனுமதி இன்றி சில்வர் ஒக் மரங்களை கடத்திய குற்றத்திற்காக 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை வனத்துறை சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4 லாரிகளில் சில்வர் ஓக் மரங்கள் கொண்டு சென்றதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி மரங்களை வெட்டி விற்பனைக்காக கொண்டு சென்றது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்பின் வனத்துறையினர் மரங்கள் மற்றும் நான்கு லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.