Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தவறி விழுந்த காட்டெருமை…. 3 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்து படுகாயமடைந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் 8 வயது மதிக்கத்தக்க காட்டெருமை  வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்துள்ளது. இதனை அடுத்து சாலையோர தடுப்பு சுவரில் இருந்து காட்டெருமை குன்னூர்-கோத்தகிரி சாலையில் விழுந்து விட்டது. இதனால் அந்த காட்டெருமையின் காலில் படுகாயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமைக்கு பசுந்தீவனம் அளித்துள்ளனர். அதன்பின் வனத்துறையினர் கால்நடை மருத்துவரின் உதவியோடு காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சிம்ஸ் பூங்கா அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு காட்டெருமைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |