4 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ஜோசப் கென்னடி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இங்கே பணிபுரிந்து வந்த ரவி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த தனசேகரன் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் இங்கே பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.