விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியின் புரோமோவை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஸ்டார் கிட்ஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் செய்யும் கலாட்டா மிகவும் ஸ்வாரசியமாக இருக்கும். இந்நிலையில் இந்த வார புரோமோவை விஜய்டிவி வெளியிட்டுள்ளது.
அதில் பிரபலங்கள் நிஷா, பாடகி ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ் ஆகியோர்கள் தாங்கள் வேலைக்கு வருவதால் தங்களது குழந்தைகளை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என்பதை பற்றி பேசியுள்ளனர். இதைக் கேட்டு மற்றவர்களும் தேம்பித் தேம்பி அழுகிறார். இந்த புரோமோவைக் கண்ட ரசிகர்களும் வருத்தம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.