பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீரமல்லு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதை தொடர்ந்து பவன் கல்யாணின் 28-வது படத்தை இயக்குனர் ஹரிஷ் இயக்க இருக்கிறார்.
Someone who always thinks about d society n serves habitually in any event with such pride n conviction like u do deserve d world n more @pawankalyan sir.
You are, and always will be, a true hero n it’s an honour to be wishing you well on your birthday 💐💐#HariHaraVeeraMallu pic.twitter.com/O5Gqk35v61
— Krish Jagarlamudi (@DirKrish) September 2, 2021
இதுதவிர கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஹரிஹர வீரமல்லு படத்தில் பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நேற்று பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஹரிஹர வீரமல்லு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது.