Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி ஓட்டுனர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி கல்பனா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |