டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் ஷூ பெட்டிக்குள் கிளியை வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கிளியைப் பறிமுதல் செய்து, அந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர், டெல்லி நீதிமன்றத்தில் கிளியைக் கடத்த முயன்ற நபரையும், 13 கிளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நபர் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின் கடத்த முயன்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கிளியை உஸ்பெகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாகவும், அதனை வைத்து அதிகப் பணம் தருவதாக சிலர் கூறியதால் கடத்த முயன்றேன் என்று விசாரணையில் கூறினார்.இதையடுத்து கடத்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்தார். டெல்லி நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து 13 கிளிகளையும் ஒக்லா பறவைகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.