Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS SA : அவிஷ்கா பெர்னாண்டோ அசத்தல் சதம் …. 14 ரன்கள் வித்தியாசத்தில் ….இலங்கை அணி வெற்றி ….!!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது .இதில்  இரு அணிகளுக்கு இடையேயான முதல்  ஒருநாள் போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது .இதில் தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து அசத்தினார் .இதில் 118 ரன்கள் எடுத்திருந்தபோது அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்டமிழந்தார் .தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபடா, மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் , ஷம்சி ஒரு விக்கெட்டும்  கைப்பற்றினர் .

இதன் பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 301  ரன்களை  வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய  மார்க்ராம்  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதையடுத்து  வான் டெர் டுசன் 59 ரன்னும் , பவுமா 38 ரன்னும், கிளாசன் 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் . இறுதியாக தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து தோல்வியை சந்தித்தது .இதனால் 14 ரன்கள்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செய 2 விக்கெட்டும், கருணரத்னே, ஹசரங்கா மற்றும்  ஜெயவிக்ரமா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர் .

Categories

Tech |