ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடந்தது .இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 47 ரன்களும் , பால் ஸ்டிர்லிங் 38 ரன்களும் மற்றும் பால்பிர்னி 36 ரன்களும் எடுத்தனர் .
இதன்பிறகு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.ஆனால் அயர்லாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே திணறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அயர்லாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியுள்ளது.