கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி சுப்பிரமணியன் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சூரியமூர்த்தி என்பதும் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சூரியமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.