விடாமல் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகாமையில் முகையூர் கிராமத்தில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலதண்டாயுதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலதண்டாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.