Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ஓட்டுநர்…. சோதனைச் சாவடி மீது மோதிய லாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டுனர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததால் சாலையில் இருந்த சோதனை சாவடி மீது மோதியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேர முதல் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்ட எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி சோதனைச் சாவடி மீது மோதியுள்ளது. இதனால் சோதனைச்சாவடி முற்றிலும் சேதமடைந்து மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த இரண்டு காவல்துறையினர் தப்பியுள்ளனர். இதனையடுத்து லாரி ஓட்டுனரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வெங்கடேசன் என்பதும் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |