பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காத காரணத்தினால் ஊராட்சி செயலாளர்கள் 2 பேருக்கு பத்து நாள் ஊதியம் வழங்கக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பதிவேடு மற்றும் சொத்து பதிவேடு உள்ளிட்டவைகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பதிவேடுகளை சரியாகப் பதிவு செய்யாமல் இருந்தது கலெக்டருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஊராட்சி செயலாளர்களான செல்வராணி மற்றும் குமார் ஆகிய இரண்டு பேருக்கும் 10 நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டாம் எனவும், பின் ஏழு நாட்களுக்குள் பதிவுகளை சரி செய்ய வேண்டுமெனவும் அதற்கு உரிய விளக்கத்தை வழங்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.