ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன், பிரிட்டன் அரசு தங்களுக்கு 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மாகாணங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி நாட்டில் செலுத்தப்பட்டு வருகிறது.
எனினும், மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வழங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆஸ்திரேலியாவிற்கு தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, நாட்டில், 16 வயதுக்கு அதிகமான நபர்களில் 40% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.